Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2017 நவம்பர் 03 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்
அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொட்டகலை நகரில் இன்று (03) மாபெரும் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொட்டகலை நகரிலுள்ள வர்த்தக நிலை உரிமையாளர்கள் இன்று காலை சுமார் 2 மணிநேரம் வர்த்தக நிலையங்களை பூட்டி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கொட்டகலை பிரதேச சபை ளாகப்பகுதியிலிருந்து ஆரம்பமான குறித்த பேரணி, கொட்டகலை புகையிரத கடவை சந்தி வரை சென்று மீண்டும் கொட்டகலை விநாயகர் ஆலய முன்றலில் வந்து நிறைவுப்பெற்றது.
சுமார் 200 ற்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் சுலோகங்களை ஏந்திய வண்ணம் கோஷங்களையும் எழுப்பி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், பிலிப்குமார் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு மீண்டும் தொண்டமானின் பெயர் இடப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago