2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சிகரெட் வாங்க வந்த இளைஞன் தப்பியோட்டம்

Sudharshini   / 2016 மே 16 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித்ராஜபக்ஷ, மு.இராமசந்திரன்

ஹட்டன் நகரில் 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாளைக் கொடுத்து, சிகரெட் கொள்வனவு செய்ய  முற்பட்ட இளைஞனைப் பிடிக்க முற்பட்ட போதிலும், அவர் தப்பியோடி தலைமறைவாகிய சம்பவமொன்று, ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு வருகை தந்துள்ள மேற்படி இளைஞன், 5,000 ரூபாயைக் கொடுத்து 4 சிகரெட்டுகளை வாங்கியுள்ளான். குறித்த நாணயத்தாள் போலியானது என தெரிந்துக்கொண்ட கடை உரிமையாளர், அது தொடர்பில் அவ்விளைஞனிடம் விசாரித்துள்ளார். எனினும், அவரது கேள்விகளுக்கு பதில் கூறாத அவ்விளைஞன், அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இவ்விடயம் தொடர்பில், வர்த்தக நிலைய  உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .