Niroshini / 2016 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புரோன்ஸ் வீக் சின்னதோட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களும் பொதுமக்களும் தோட்ட பகுதிகளில் சில குழுவினர் மது அருந்திவிட்டு திருவிழாக்களின்போதும் ஏனைய விசேட நிகழ்வுகளின்போதும் குழப்பம் விளைவிக்கின்றமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மஸ்கெலியா - புரோன்ஸ்வீக் சின்னதோட்டத்தில் கோவில் திருவிழாக்களோ வேறு எந்த விழாக்களோ பொதுமக்களால் நடாத்த முடியவில்லை. அங்கு இருக்கின்ற ஒரு குழுவினர் இவ்விழாக்களின்போது மது அருந்திவிட்டு குழப்பம் விளைவிக்கின்றனர்.
அத்தோட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற கோயில் திருவிழாவின் வரவு செலவு தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை அத்தோட்ட கோயிலில் இடம்பெற்றது. இதன்போது, இந்த குறிப்பிட்ட குழுவினர் மது அருந்திவிட்டு குழப்பம் விளைவித்தனர்.
இவ்வாறு மலையக பகுதிகளில் பெரும்பாலான தோட்டப் பகுதிகளில் இவ்வாறான விழாக்களின்போது சில குழுக்கள் மது அருந்திவிட்டு குழப்பத்தை ஏற்ப்படுத்துகின்றனர். மது அருந்தினால் மாத்திரமே குழப்பம் விளைவிக்க முடியும் என்ற செயல் பொய்யானது. இக்குழுவினர் திட்டமிட்டே இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இவர்கள் குடிபோதையில்தான் குழப்பம் விளைவிக்கின்றார்கள் என்பதை பொதுமக்களும் இளைஞர்களும் நம்ப தயாராக இல்லை. எனவே, இவர்களின் அடாவடித்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இனிவருங்காலங்களில் மலையக தோட்ட பகுதிகளில் பொதுமக்கள் அனைவரும் அமைதியாக விழாக்களை கொண்டாட வேண்டும். இதற்கு அரசாங்கமும் பொலிஸாரும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கோரியே இந்த ஆர்பாட்டத்தை அங்குள்ள இளைஞர்களும் பொதுமக்களும் முன்னெடுத்தனர்.
இன்று பிற்பகல் அத்தோட்டத்தில் அணி திரண்ட இளைஞர்களும் பொதுமக்களும் குறித்த குழுவினருக்கு எதிராக பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதன்போது, சம்பவ இடத்துக்கு வருகை தந்த மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி இது தொடர்பாக தோட்ட பகுதிகளில் விழாக்கள் நடைபெறும்போது, பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கினால் அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago