2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரிப்பு: பீதியில் மக்கள்

Kogilavani   / 2016 ஜூலை 07 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இந்திக அருண குமார

மாத்ளை பல்லேபொல பிரதேச செயலகத்துக்குட்பட்ட பல பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தாம் அச்சத்துடன் வாழ்வதாக பிரதேவாசிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கொஹோ, மொரகஸ் பிடிய, உதுரன்பெலஸ்ஸ, ஹெஹெல்பொல, வல்மோருவ ஆகிய பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

இரவு வேளைகளில் வரும் சிறுத்தைகள் வளர்ப்பு பிராணிகளை இழுத்துச் செல்வதுடன் மறைந்திருந்து தம்மை தாக்குவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கிராம அதிகாரி ரம்யா திசாநாயக்கவிடம் கேட்டபோது, 'மேற்படி பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமை தொடர்பில் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளோம். இரவு வேளையில் நடமாடும் சிறுத்தைகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .