Sudharshini / 2016 ஜனவரி 24 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
'சிறுநீரகங்களை விற்பனை செய்து எதிர்கால வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ள வேண்டாம்' என பெருந்தோட்ட மக்களிடம் இராஜாங்க கல்வி அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
டயகமை, சந்திரிகாமம் தோட்டத்தில் 25 வீடுகளை கொண்ட புதிய கிராமத்துக்கு அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், 'வறுமையை எதிர்நோக்கியுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களில் பலர், தமது சிறுநீரகங்களை வெளியாட்களுக்கு விற்பனை செய்து வருவதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தோட்டப் பகுதியை சேர்ந்தவர்களே சில தரகர்கள் ஊடாக சிறுநீரகங்களை விற்பனை செய்வதாக அறியமுடிகின்றது' என்றார்.
'வறுமை இருக்கத்தான் செய்யும். அதற்காக சிறுநீரகங்களை விற்பனை செய்து எதிர்கால வாழ்க்கையை பாலாக்கிக்கொள்ள வேண்டாம். இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு தோட்டப் பகுதிகளில் இவ்வாறான தரகர்களுக்கு இடங்கொடுக்கப் போவதில்லை' என அவர் மேலும் கூறினார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago