Sudharshini / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதினேழு வயது சிறுவனுடன் குடும்பம் நடத்தியதாகக் கூறப்படும் பெண்ணொருவரை எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுவனை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் நன்னடத்தை முகாமில் ஒப்படைக்குமாறும் வெல்லவாய நீதவான் நீதிமன்ற நீதவான் ஜனிதா பெரேரா, புதன்கிழமை (21) உத்தரவிட்டார்.
வெல்லவாயவைச் சேர்ந்த சிறுவனின் பெற்றோர், தமது மகனைக் காணவில்லை என பொலிஸில் ஞாயிற்றுக்கிழமை (18) முறைப்பாடு செய்தனர். முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், வெல்லவாய பகுதியில் சிறுவனொருவனுடன் பெண்ணொருவர் குடும்பம் நடத்தி வருவதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவ்விடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், மேற்படி இருவரையும் கைதுசெய்துள்ளனர்.
குறித்த பெண், ஏற்கெனவே மூன்று திருமணங்களைச் செய்துள்ளார் என்றும் இரண்டாவது திருமணத்தின்போது இவருக்குக் குழந்தையொன்று இருப்பதாகவும் நான்காவது முறையாகவே இச்சிறுவனுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொழும்பு, ஜா-எல பகுதியைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்விடயம் குறித்த மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
17 minute ago
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
4 hours ago
18 Apr 2026