2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்திரிகர்கள் சிறுவர்,முதியவர்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்கவும்

Kogilavani   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொள்பவர்கள், சிறுவர், முதியவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நல்லத்தண்ணி பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர்.

புத்தாண்டு காலப்பகுதியில் சிவனொளிபாத மலைக்கு வருகை தந்தவர்களில் சுமார் 200 பேர் பாதைமாறி சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

ஹட்டன் வழியாக மலை ஏறியவர்கள், வழிதவறி இரத்தினபுரி வழியாக இறங்கிய சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. இவர்களில் சிறுவர்,  முதியவர்களே அதிகமாக உள்ளடங்குகின்றனர்.

புத்தாண்டு காலத்தில் சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமான யாத்திரிகர்கள் சிவனொளிபாத மலைக்கு வருகை தந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட சன நெரிசல் காரணமாகவே இவர்கள் வழி தவறி சென்றுள்ளனர். எனவே, சிறுவர், முதியவர்கள் தொடர்பில் யாத்திரிகர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்' என பொலிஸார் மேலும் கோரியுள்ளனர்.

பொலிஸார், வழிதவறி பயணித்தவர்களை மீட்டு அவர்களது குடும்பத்தாருடன் இணைத்துள்ளதாக தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .