Princiya Dixci / 2016 ஜனவரி 27 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் புதிய கல்வியாண்டிற்கான சட்டமாணி பட்டப்படிப்பு நிழ்ச்சித் திட்டத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான போட்டிப் பரீட்சை நாடளாவிய ரீதியில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் திறந்த பல்கலைக்கழக பிராந்தியக் கற்கை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பிராந்திய கற்கை நிலையங்களுக்கு தமிழ் மொழியில் சட்டமாணிப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடர மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
மேற்படிப் பரீட்சைக்குத் தோற்றும் தமிழ் மொழி மூல மாணவர்களின் நலன் கருதி, கண்டியில் எதிர்வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 9.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை, இல. 127, கொடுகொடல்ல வீதியில் அமைந்துள்ள சட்டக் கல்வி மையத்தில் வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கில் கலந்துகொள்வதன் மூலம் நுழைவுப் பரீட்சை தொடர்பான வழிகாட்டகளைப் பெற விரும்புவோர் 0770746588 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago