Kogilavani / 2016 செப்டெம்பர் 11 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச
பதுளை, பதுலுபிட்டிய பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கொல்களம் ஒன்;றை நேற்று ஞாயிற்றுக்கிழமை சுற்றிவளைத்த பதுளை பொலிஸார், அங்கு கன்று ஈனும் தருவாயிலிருந்த 7 பசுக்களை, வெட்டி இறைச்சியாக்கி குற்றச்சாட்டில் 10 பேரையும் கைதுசெய்துள்ளதுடன் இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த 5 கன்றுக் குட்டிகளையும் மீட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விபத்தில் நால்வர் படுகாயம்
சிவாணிஸ்ரீ
இரத்தினபுரியிலிருந்து எம்பிலிபிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் இரத்தினபுரியை நோக்கி பயணித்த லொறியும், எம்பிலிபிட்டிய இரத்தினபுரி பிரதான வீதி பெல்வாடிய எனுமிடத்தில், சனிக்கிழமை மாலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் ஒருவர் காயம்
அக்குரஸ்ஸயிலிருந்து கொடபிட்டியவுக்கு பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள நிலவளகங்கையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்களில் பயணித்த 26 வயது இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்தில், தெனியாய கெட்டப்பொல பிரதேசத்தைச் சேர்;ந்தவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
காட்டுத்தீயினால் 300 ஏக்கர் நாசம்
நக்கல்ஸ் மலைத்தொடரில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட காட்டுத் தீயை விமான படை வீரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கண்டி உதவி இயக்குநர் இந்திக்க ரனவீர தெரிவித்தார்.
காட்டுத்தீயினால் , சுமார் 300 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026