2025 மே 19, திங்கட்கிழமை

சடலங்களை புதைக்க முடியாத நிலையில் பொது மயானம்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 04 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா

ஹட்டன் -குடா ஓயா பொது மயானமானது,  நீண்ட நாட்களாக முறையாக சுத்தம் செய்யப்படாததால், காடாக  மாறியுள்ளது.

இந்த பொது மைதானம் காடாக மாறிவருவதால், குறித்த பொது மயானத்திற்கு சடலங்களைப் புதைப்பதற்கு கொண்டு செல்பவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக  மழை நாட்களில் இந்த மயானத்திற்கு சடலத்தை எடுத்துச் செல்வது மிகவும் கடினமாக உள்ளதென்றும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இறந்தவர்களின் நினைவை அனுஸ்டிக்க மயானத்துக்கு  ​​இந்த நிலைமைகளால் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் தவிசாளர் சடையன் பாலச்சந்திரன், இந்த மயானத்தை சுத்தப்படுத்தி அழகுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும்

இத்திட்டம் விரைந்து செயல்படுத்தப்பட்டு மயானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X