2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

சடலத்தை அடையாளம் காண உதவுங்கள்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

எஹலியகொடை பரகடுவ பிரதேசத்தில் வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 70 வயதுடை வயோதிபர் ஒருவர் கடந்த 14ஆம் திகதி மரணமடைந்துள்ளார்.

இவரின் சடலம் கடந்த ஐந்து நாட்களாக இரத்தினபுரி சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவரை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவிகளை நாடியுள்ளனர்.

எனவே மேற்படி வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ள முதியவர் யார் என்று இதுவரை அடயாளம் காண முடியாத நிலையில் உள்ளதால் இவர் குறித்து அடையாளம் தெரிந்தவர்கள் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு பொது மக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .