2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

சட்ட விரோத கட்டடங்களை அகற்ற நடவடிக்கை

மொஹொமட் ஆஸிக்   / 2020 மே 26 , பி.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

​கொவிட் – 19ஐக் கட்டுப்படுத்துவதற்காக  ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோதக் கட்டடங்களை அகற்றுவதற்கு, ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையில்  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஹரிஸ்பத்துவ பிரதேச சபையின் மாதாந்தப் பொதுக்கூட்டம், இன்று (26) நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த சபைத் தவிசாளர் ஆனந்த  ஜயிவிலால்,

ஊரடங்கு அமலில் இருந்த போது, சட்டவிரோதக் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் எனவே, முறைப்பாடுகள் கிடைத்த, முறைப்பாடுகள் கிடைக்காத கட்டங்கள் என, சட்டவிரோதக் கட்டடங்கள் இனங்காணப்பட்டு அவை அகற்றப்படல் வேண்டும் என்று கூறினார்.

எனவே, சட்டவிரோதக் கட்டடங்கள் நிர்மாணித்திருப்போர், அவற்கை அகற்றிக்கொள்ளவேண்டும் என்றும்அவ்வாறு அகற்றாவிடின், சபையால் அவை அகற்றப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .