Editorial / 2020 மே 31 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.புவியரசன்
சுகயீனமுற்ற நிலையில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஊவா, சப்ரகமுவ மாகாண ஆளுநரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மார்ஷல் பெரேரா, கடந்த வெள்ளிக்கிழமை (29) காலமான நிலையில், இறுதிக் கிரியைகள், புதன்கிழமை (03) மாலை பதுளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இவரது பூதவுடல், கொழும்பிலுள்ள ஜெயரட்ன மலர்சாலையில் நேற்று (30) முதல் வைக்கப்பட்டிருந்த நிலையில், நாளை (01), சப்ரகமுவ மாகாண சபையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக அவரது புதல்வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
பின்னர், பதுளையிலுள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துவரப்பட்டு, 2, 3ஆம் திகதிகளில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 3ஆம் திகதி மாலை பதுளை பொது மயானத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளது.
மார்ஷல் பெரேரா, இடதுசாரி கொள்கையில் ஈடுபாடு கொண்ட லங்கா சம சமாஜ கட்சியில் இணைந்து செயற்பட்டார். அதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, 1964ஆம் ஆண்டு நவ சம சமாஜ கட்சியை ஆரம்பித்தவர்களில் ஒருவராகி பதுளை மாவட்ட அமைப்பாளராகவும் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago