2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட உப பொலிஸ் பரிசோதகர் கைது

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 6 பேர் நோர்வூட் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்னர்.

கைதுசெய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் சுற்றாடல் பிரிவுக்கு பொறுப்பானவர் என்றும் ஏனைய சந்தேகநபர்கள் மஸ்கெலியா மற்றும் நோர்வூட் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் ஆறு பேரும் மிக நீண்ட காலமாக இந்த சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

போட்ரி  தோட்டத்திலுள்ள ஆற்றில் சந்தேகநபர்கள் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இன்று (28) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பிலேயே சந்தேகநபர்கள் 6 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஆறு பேரும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X