Editorial / 2018 ஜனவரி 30 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை, ருவான்வெல்ல அம்பிரிகல பிரதேசத்திலுள்ள வீடொன்றில், சட்டவிரோதமாக மதுபான தயாரித்து விற்பனை செய்துவந்ததாகக் கூறப்படும் இருவரை, கலால் திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கலால் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து, மேற்படி இடத்தை, திங்கட்கிழமை சுற்றிவளைத்த அதிகரிகள், இருவரையும் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, 57 பெரல்களில் நிரப்பப்பட்ட 300,000 லீற்றர் மதுபானம், 32 கோடா பெரல்கள், 14 வாயு சிலிண்டர்களையும் கலால் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Apr 2026