Editorial / 2020 மே 07 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
நுவரெலியா, தலவாக்கலை, ஹட்டன், மஸ்கெலியா, மன்றாசி, கொட்டகலை ஆகிய நகரங்களில் உள்ள சதொச வர்த்தக நிலையங்களில், பொருள்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில், பெருந்தோட்டமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மிகவும் அத்தியாவசியப் பொருள்களான அரிசி, கோதுமை மா, பருப்பு, சீனி, டின்மீன், பால்மா ஆகிய பொருள்களுக்கே தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேடமாக, அக்கரபத்தனை, மன்றாசி, ஹோல்பூறூக், டயகம ஆகிய பகுதிகளிலுள்ள 42 தோட்டங்களைச் சேர்ந்த 48 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், இவர்கள் விசேடமாக மன்றாசியிலுள்ள சதொச நிலையத்துக்கும் பின்னரே ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை பகுதிகளிலுள்ள சதொச நிலையத்துக்கும் செல்கின்றனர்.
இதனா்ல, பல கிலோமீற்றர் தூரம் பஸ்ஸில் செல்லவேண்டியுள்ளதாகவும் பொருள்களை வாங்குவதற்கென்று சென்று, தேவையான பொருள்கள் இன்றி, அதிக விலை கொடுத்து மற்றயை கடைகளிலேயே பொருள்களைக் கொள்வனவு செய்யவேண்டியுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த 35 வருடங்களாக, மன்றாசியில் ஒரு சதொச நிலையம் இல்லாத நிலையில், கொட்டகலை பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.சச்சிதானந்தனின் முயற்சியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னரே இந்த சதொச திறந்து வைக்கப்பட்டதாகவும் எனினும் பொருள் தட்டுப்பாடு பிரச்சினை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதை ஒரு காரணமாக பயன்படுத்தி, நகரிலுள்ள வரத்தக நிலைய உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலையையும் மீறி பொருள் விற்பனையில் ஈடுபடுவதாகவும் அதிகமான விலையில் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்பவர்களைப் பரிசோதனை செய்யும் அதிகாரிகளும் பக்கசார்பான முறையிலேயே நடந்துகொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே அனைத்து சதொச நிலையங்களில் காணப்படும் பொருள் தட்டுபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து, தேவையான பொருள்களைப் பெற்று கொள்ள, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago