2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சத்தியப்பிரமாணம்

Editorial   / 2018 மார்ச் 23 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக இரத்தினபுரி மற்றும் கலவான ஆகிய தேர்தல் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு, இரத்தினபுரி புதிய நகரில் அமைந்தள்ள 'காலன்ட' ஹோட்டல் மண்டபத்தில், நேற்று (22) நடைபெற்றது.

இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இரத்தினபுரி தேர்தல் தொகுதியின் ஐ.தே.க அமைப்பாளருமான ஏ.ஏ.விஜேதுங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  இரத்தினபுரி மாநகர சபை, இரத்தினபுரி பிரதேச சபை, குருவிட்ட பிரதேச சபை மற்றும் கலவான தேர்தல் தொகுதியில் கலவான பிரதேச சபை, அயகம பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளில் ஐ.தே.கட்சியில் வெற்றிபெற்ற 34 உறுப்பினர்கள், இதன்போது சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.விஜேதுங்க,

இரத்தினபுரி மாநகர சபைக்கு, நகர பிதா ஒருவரை தெரிவு செய்வதற்கு தாமரை மொட்டு முயற்சி செய்து வருவதாக தெரிவித்த அவர், அவர்களின் முயற்சி ஒருபோதும் பலிக்காது என்றும் ஐக்கிய தேசிய கட்சி,
ஸ்ரீ லங்கா சுதந்தரக் கட்சியுடன் இணைந்து, இரத்தினபுரி மாநகர சபைக்கு நகர பிதா ஒருவரை நியமிக்கும் என்றும் தெரிவித்தார்.

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் கலந்துரையாடி, பொது தீர்மானத்துக்கு அயை ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த நகர பிதா ஒருவர் இரத்தினபுரி மாநகர சபைக்கு நியமிக்கப்படுவார். இரத்தினபுரி மாநகர சபையை, சிறந்த மாநகர சபையாகக் கட்டி எழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் சரி, திருட்டு சம்பவங்களிலோ அல்லது துஷ்பிரயோகத்திலோ ஈடுபட்டால், அவர்களை உடனடியாக நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில், ஐக்கிய தேசிய கட்சியின்  இரத்தினபுரி மாவட்ட முகாமையாளர் குருகுலரத்ன, சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் ஐ.தே.க உறுப்பினர்களான ஹெய்யா எம்.இப்ளார், சமித்த ஆட்டிகல, கலவான தேர்தல் தொகுதியின் ஐ.தே.க.அமைப்பாளர் சரத்சந்திர ராமநாயக்க உட்பட கட்சி ஆதரவாளர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினாகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X