2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

சப்ரகமுவ மாகாண சபையில் தேகாரோக்கிய நிகழ்வு

Sudharshini   / 2016 ஜனவரி 25 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சின் செயற்படுத்தலின் கீழ், இன்று (25) ஆரம்பித்து வைக்கப்பட்ட தேகாரோக்கிய விளையாட்டு வாரத்தை முன்னிட்டு, சப்ரகமுவ மாகாண சபை கட்டடத்தொகுதியில்; உடற்பயிற்சி நிகழ்வுகள் இடம்பெற்றன.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா, மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் அதுலகுமார ராகுபந்த, சபை முதல்வர் அசோக ஜயவர்தன, மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன, பிரதி பிரதான செயலாளர் கபில பெரேரா, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களான பி.எம்.பி.என்.பெலிகம்மன, மஹிந்த எஸ்.வீரசூரிய, தேவப்பிரிய விஜயராஜா மற்றும் மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர்கள் உட்பட அரச அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் தேகாரோக்கிய உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .