2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கும் பூட்டு

Sudharshini   / 2016 மே 18 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி  ஸ்ரீ

தொடர்ந்து பெய்து வரும் அடைமழை  காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைகள் உட்பட சகல பாடசாலைகளையும்  இன்றும்(18) நாளையும்; (19) மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக  சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்தார்.

 மண்சரிவு அபாயம் காரணமாக மேற்படி மாகாணத்தில் சகல பாடசாலைகளையும் மூடுவது  குறித்து விஷேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (17) இரவு மாகாண சபை கல்வி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே பாடசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டது என சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு தெரிவித்தது.

இது குறித்து  சப்ரகமுவ மாகாண  பாடசாலை அதிபர்களுக்கு தொலைபேசி மூலம் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் பாடசாலைகள் மூடப்பட்டதுடன் நாளையும் மூடப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .