Sudharshini / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்மாதம் 10ஆம் திகதி சம்பளம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாத்தளை, எல்கடுவ, செம்புவத்த தோட்டங்களுக்குட்டபட்ட 5 பிரிவுகளைச் சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள் பாதையை மறித்து இன்று (14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக செம்புவத்த குளத்தை பார்வையிட வந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
'தீபாவளி கொடுப்பனவின் மிகுதி பணம் வழங்கப்பட வேண்டும், 1000 ரூபாய் சம்பளம் உயர்வு வேண்டும், உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும், செம்புவத்த குளத்தினை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் ஊடாக மாத வருமானமாக கிடைக்கும் 20 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகை தொடர்பில் கணக்கு விவரம் மக்களுக்கு காண்பிக்கப்பட வேண்டும்,தோட்டங்கள் துப்பரவு செய்யப்பட வேண்டும், உரிய தினத்தில் சம்பளம் வழங்கப்பட வேண்டும்' என பல்வேறுப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமக்கான சம்பளம் நாளை கொடுக்கப்படாவிடின் எல்கடுவ பிளாண்டேஷனுக்கு சொந்தமான 9 தோட்டங்களை சேர்ந்த 20 பிரிவுகளை சேர்ந்த மக்களையும் இணைத்து, மாத்தளை நகரில் பாரிய போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தோட்ட மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, இனி வரும் காலங்களில் வாக்கு கேட்டு வரும் அரசியல் வாதிகளுக்கும் தொழிற்சங்க தலைமைகளுக்கும் தகுந்த பாடம் புகட்டுவதாகவும் தெரிவித்தனர்.
இப்போராட்டத்திற்கு சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு ஆதரவு வழங்கியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .