2025 மே 08, வியாழக்கிழமை

சமய நிகழ்வில் பங்கேற்ற இருவருக்கு கொரோனா

Kogilavani   / 2020 நவம்பர் 04 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்   

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்திலுள்ள வீடொன்றில், அண்மையில் நடைபெற்ற சமய நிகழ்வில் பங்கேற்ற இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று, இன்று (4) உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவருக்கே கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேற்படித் தோட்டத்தைச் சேர்ந்த பேலியகொடை மீன் சந்தையில் பணிபுரிந்த நபரொருவரின் வீட்டில், கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற சமய நிகழ்வில் இவர்கள் பங்கேற்றுள்ளனர்.  அதன்மூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி மஸ்கெலியா பகுதியில் இதுவரை 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.   

தொற்றுக்குள்ளான இருவரும் கடும் சுகாதார பாதுகாப்புடன் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X