2025 மே 07, புதன்கிழமை

‘சமூக பாதுகாப்பை கவனிக்கவும்’

Editorial   / 2020 நவம்பர் 09 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம்

தீபாவளிப் பண்டிகைக்காக, சொந்த வீடுகளுக்கு வருகைதருவோர், சமூக பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு செயற்படவேண்டும் என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் நுவரெவியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று நீக்கும பூஜை, நேற்று (08) மாலை, நடத்தப்பட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அபாய வலையங்களில் இருந்து வருபவர்களால், ஏதோ ஒரு காரணத்தால் மற்றையவர்களுக்கு தொற்று ஏற்பட்டால், அது பாரிய பின்விளைவுகளைத் தரும் என்றும் எனவே, வருபவர்கள் மற்றவர்களிடம் இருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு, தீபாவளிப் பண்டிகையை கொண்டாடவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X