2025 மே 19, திங்கட்கிழமை

சம்பள அதிகரிப்பு சம்பள நிர்ணய சபை ஊடாக அதிகரிக்கப்படல் வேண்டும்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமானது, சம்பள நிர்ணய சபை ஊடாக அதிகரிக்கப்பட வேண்டும் என, தொழில் அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியினால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை  சம்பள நிர்ணய சபையினூடாக 3250 ரூபாயாக  அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் இன்றைய தினம் தொழில் அமைச்சில் கையளிக்கப்பட்டுள்ளது.

 சம்பள நிர்ணய சபையின் செயலாளர் H.G.வசந்த குணவர்தன, தொழில் அமைச்சின் செயலாளர் R.P.A.விமலவீர, தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம்  B.K.பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோருக்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் மற்றும் சங்கத்தின் உப தலைவர் சுஜித் சஞ்சய பெரேரா  சங்கத்தின் உத்தியோகஸ்தர்கள் மூலம் இக்கடிதம் கையளிக்கப்பட்டது.

இக்கடிதத்தை ஏற்ற தொழில் அமைச்சின் அதிகாரிகள், உடனடியாக சம்பள நிர்ணய சபையினை அழைத்து, இவ்விடயம் தொடர்பாக கலந்தாலோசித்து தீர்வை பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X