Mayu / 2024 பெப்ரவரி 28 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதியிலிருந்து மூன்று ஆண்டு காலப்பகுதிக்கு தேயிலை, இறப்பர் ஆகியவற்றுக்கான தொழிலாளர்கள் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளுடனான சந்திப்பு இன்று (28) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான சௌமியபவனில் இ.தொ.கா பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைப்பெற்றது.

தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலும், சம்பள நிர்ணய சபையில் எமது கோரிக்கைகளை எவ்வாறு முன்வைக்கப்படல் வேண்டும் என்பதையும் இச்சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் இ.தொ.கா சார்பில் தேயிலை உற்பத்திக்கான சம்பள சபையின் அங்கத்தவரும், சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து, இறப்பர் பயிரிடல் பதனிடல் சம்பள சபைக்கான அங்கத்தவரும் உபதலைவருமான எஸ்.இராஜமணி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகச் செயலாளர் எஸ்.பி விஜயகுமார், ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பி.ஜி சந்திரசேன, செங்கோடி சங்கத்தின் சார்பில் வி.ராஜலக்சுமி, ஸ்ரீலங்கா பொதுஜன தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சிறிமான ஹெட்டிகே சாந்த, ஜே.எஸ்.எஸ் சங்கத்தின் சார்பில் ஜே.ஏ.டி நிஸாந்த புஸ்பகுமார ஆகியோர் இதில் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
3 minute ago
10 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
1 hours ago
2 hours ago