2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சரக்கு ரயில் தடம்புரண்டது

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த 1126 சரக்கு ரயில் ரொசெல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

தடம் புரண்ட ரயிலை வழமைக்கு கொண்டு வரும் வரை, கொழும்பிலிருந்து பதுளைக்கு பயணிக்கும் பொடி மெனிகே மற்றும்  பதுளையிலிருந்து கொழும்புக்கு பயணிக்கும் உடரட்ட மெனிகே ஆகிய ரயில் சேவைகளை ரொசல்ல ரயில் நிலையம் வரை முன்னெடுத்து  அங்கிருந்து பயணிகளை இரு ரயில்களிலும் மாற்றி அனுப்பவும்  நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X