R.Maheshwary / 2022 ஜனவரி 17 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசியத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (16) நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விழா நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
அன்று வாக்களித்து இன்று அரசாங்கத்தை விமர்சிக்கும் சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டு சஜித் பிரேமதாசவை அடுத்த ஜனாதிபதியாக தெரிவுச் செய்ய வேண்டும். இப்போது தை பிறந்துள்ளது. நிச்சயம் வழி பிறக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றுப்பட்டு ஒத்துழைக்க வேண்டும். உங்களுக்கு வலித்தால் எமக்கும் வலிக்கும். இது தொப்புள் கொடி உறவு இதை எவராலும் அசைக்க முடியாது.
வேதனைக்கு மத்தியில் சாதனை படைப்பது தான் இந்த மலையக மக்கள். பெருந்தோட்ட கம்பனிகாரர்களினால் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதனை மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு மக்கள் ஒண்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
5 minute ago
23 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
23 minute ago
38 minute ago