Kogilavani / 2018 ஜனவரி 23 , பி.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
அக்கரப்பத்தனை, கொடமல்லி தோட்டத்தில், ஏழு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட, அதே தோட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை, எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலியா மாவட்ட நீதவான் புபுது ஜெயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமியை, குறித்த சிறுவன் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், சிறுமியின் வாயைத் துணியால் கட்டிவிட்டு, சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, இவ்விடயம் தொடர்பில் தனது பெற்றோருக்குத் தெரியப்படுத்தியுள்ளதுடன் பெற்றோர், அக்கரப்பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், மேற்படி சிறுவனைக் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, வைத்திய பரிசோதனைக்காக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Apr 2026