2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

சுற்றுலாப் பயணியின் சடலம் மீட்பு

Kogilavani   / 2018 பெப்ரவரி 25 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

எல்ல நகரிலுள்ள ஹோட்டலொன்றின் அறையிலிருந்து, சுவிற்ஸர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரின் சடலத்தை, எல்ல பொலிஸார், நேற்று காலை மீட்டுள்ளனர்.

கெய்ரிவோகர் (வயது 70) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்த பொலிஸார், இவர், கடந்த 21 ஆம் திகதி முதல் 24ஆம் திகதிவரை, மேற்படி அறையை, வாடகைக்கு அமர்த்தியிருந்தார் என, விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேற்படி நபருக்கு தேநீர் வழங்குவதற்காக, ஹோட்டல் பணியாளர் ஒருவர், அவரது அறைக்குச் சென்று கதவைத் தட்டிப் பார்த்துள்ளதாகவும், அந்நபரிடமிருந்து எவ்வித பதிலும் வராததால், அது தொடர்பில் ஹோட்டல் நிர்வாகத்துக்கு அறிவித்ததாகவும், பின்னர் தமக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக சடலம் மீட்கப்பட்டதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக, பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .