2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

செபல்டன் தோட்டம் முடங்கியது

Gavitha   / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பொகவந்தலாவ பெருந்தோட்டம், நேற்று (23) இரவு முதல், முழுமையாக முடக்கப்பட்டுள்ளது என, நுவரெலியா பொது சுகாதார பிரிவு தெரிவித்தது.

பொகவந்தலாவை செபல்டன் தோட்டமே மறு அறிவித்தல் வரை பூரணமாக முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

செபல்டன் தோட்டத்தில், நேற்று (23) மாலை 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் மறுஅறிவித்தல் வரை இத்தோட்டம் முடக்கப்பட்டுள்ளது என்றும் நுவரெலியா மாவட்ட  பிரதி சுகாதார பணிப்பாளர் இமேஸ் பிரதாப் சிங்க தெரிவித்தார்.

எனவே, இத்தோட்டத்தில் இருந்து யாரும் வெளியேற முடியாது என்றும் யாருக்கும் உள்நுழைய முடியாது என்றும்  அவர் தெரிவித்தார்.

கடந்த சில நாள்களாக, அம்பகமுவ பிரதேசத்தில் நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பொகவந்தலாவை பிரதேசத்தில் நூற்றுக்கு அதிகமான தொற்றாளர்கள் இனங்கானப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இப்பிரதேசத்தில் பாடசாலை ஒன்றும் முடக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .