Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 26 , மு.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமண வைபவமொன்றில், மணப்பெண் அணிந்திருந்த சுமார் 3.8 கிலோமீற்றர் நீளமான சேலையை, பாடசாலை மாணவர்கள் ஏந்தியிருந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை, அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பதாக, மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க அறிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், ஆராய்வதற்காக, நேற்று (25) நடத்தப்பட்ட கூட்டத்திலேயே, அவர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார். பாடசாலை மாணவர்களை, அந்த செயற்பாட்டில் ஈடுபடுத்தியமைக்கான பொறுப்பை, மத்திய மாகாண கல்விச் செயலாளரே ஏற்கவேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கண்டி- கண்ணொருவரையில். கடந்த 21ஆம் திகதியன்று இடம்பெற்ற திருமண வைபவமொன்றில், மணப்பெண் அணிந்திருந்த சுமார் 3.2 கிலோமீற்றர் நீளமான சேலையை, பாடசாலை மாணவர்கள் 250 பேர் ஏந்தியிருந்தனர்.
சாரியை ஏந்துவதற்கு, பாடசாலை மாணவர்களை சீருடையில், பாடசாலை நாளொன்றில் பயன்படத்தியமையால், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பில், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் கல்வியமைச்சு ஆகியனவும் விசாரணைகளுக்கு ஏற்கெனவே பணித்திருந்தன. மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்கவும் விசாரணைக்கு பணித்திருந்தார்.
கின்னஸ் சாதனையை படைப்பதற்காகவே, மணமகளுக்கு இவ்வளவு நீளமான சேலை அணிவிக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
43 minute ago
46 minute ago
53 minute ago