Sudharshini / 2016 மே 16 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
மு.இராமச்சந்திரன்
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென். ஜோன்டிலரி கீழ்ப்பிரிவு தோட்டத்தில், மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பது குறித்து, அமைச்சர் திகாம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டுவரவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென். ஜோன்டிலரி கீழ்ப்பிரிவு தோட்டத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களை, அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், சங்கத்தின் நோர்வூட் அமைப்பாளர் திருமதி கி.மஞ்சுளா ஆகியோர் இன்று (16) நேரில் சென்று பார்வையிட்டனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்கள் தோட்டத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம் மற்றும் தோட்ட மருந்தகம் ஆகியவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago