Kogilavani / 2018 பெப்ரவரி 25 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
மஸ்கெலியா- நல்லதண்ணி பிரதான வீதி, மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்துக்கு அருகில், இன்று (25) பகல், ஜீப் ரக வண்டி ஒன்று, வீதியை விட்டுவிலகி, சுமார் 35 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்த பொலிஸார், இவ்விபத்தில், ஜீப் வண்டியில் பயணித்த மதகுரு உட்பட மூவர், படுகாயமடைந்த நிலையில் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென்றும் தெரிவித்தனர்.
மஹியங்கனை - ஹசலக பகுதியிலிருந்து, சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்காக சென்ற இவர்கள், மீண்டும் மஹியாங்கனை - ஹசலக பகுதிக்கு, ஜீப் ரக வண்டியில் சென்று கொண்டிருந்த போதே, விபத்தை எதிர்கொண்டுள்ளனர்.
ஜீப் வண்டியானது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியதெனத் தெரிவித்த பொலிஸார், இவ்விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Apr 2026