2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஜோசப்பின் மறைவு மலையக இலக்கிய வரலாற்றின் வெற்றிடமாகும்

Freelancer   / 2022 ஒக்டோபர் 21 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக இலக்கிய வரலாற்றில் மாபெரும் வெற்றிடமே இலக்கிய தந்தை சாகித்திய ரத்ன தெளிவத்தை ஜோசப் மறைவு என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

மலையக மக்களின் மண்வாசனை கொண்ட எழுத்தாளர்கள் வரிசையில் முக்கிய மலையக படைப்பாளியாக விளங்கும் தெளிவத்தை ஜோசப் அவர்களின் மறைவு  மலையக இலக்கிய வரலாற்றின் வெற்றிடமாகும். மலையக இலக்கியங்களுக்கு எல்லாம் ஆணிவேராய் வித்திட்டவர் தெளிவத்தை ஜோசப் என்றால் அது மிகையாகாது.

மலையக மண்வாசனைக்குக் கிடைத்த தேசிய அங்கீகாரமாக அவருக்கு கிடைத்த   சாகித்திய ரத்ண விருது எனலாம்.

மலையகம் பற்றி அறிய வேண்டுமென்றால் இவருடைய நூல் படைப்புக்களை வாசித்தால் போதும் என்ற அளவுக்கு மலையக மக்களின் சமூக பொருளாதார அரசியல் அன்றாட வாழ்வியல் அம்சங்களை வெளிக்கொணரும் விதமாக இவருடைய எழுத்துக்கள்  அமைந்திருந்தன. 

அன்னாரின் மறைவானது மீள முடியா ஒரு பெரும் துயரத்தையும் நிரப்ப முடியாத ஓர் பொக்கிஷமான வெற்றிடத்தையும் நம் மத்தியில் விட்டுச்சென்றிருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார். (R)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X