2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

தேசிய பத்தாண்டு திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

Niroshini   / 2015 டிசெம்பர் 16 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்கள் வாழும் பிரதேசங்களை சமச்சீரான முறையில் அபிவிருத்தி செய்வதற்காக தயாரிக்கப்பட்டு வரும் தேசிய பத்தாண்டு திட்டம் தொடர்பில் ஐக்கிய நாட்டு அபிவிருத்தி திட்ட அதிகாரிகளுக்கும் அமைச்சருக்குமான இடையிலான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை மலைநாட்டுபுதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பத்தாண்டு திட்டத்தினை ஜனாதிபதி அவர்களும், பிரதமர் அவர்களும் ஐந்தாண்டு திட்டமான வரையறை செய்யும்படி பரிந்துரை செய்துள்ளார்கள். அதற்கேற்றாற்போல பத்தாண்டு திட்டத்தை ஐந்தாண்டு திட்டமாக வரையறை செய்வது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இத்திட்டத்தினை ஜனவரி இறுதி பகுதியில் பிரதமரின் தலைமையில் அங்குரார்பணம் செய்வது தொடர்பாகவும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ள செயற்திட்டங்கள் தொடர்பிலும் இவ்வேலைத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை, அமைச்சரின் ஆலோசகர் எம் வாமதேவன், மக்கள் தொடர்பு அதிகாரி பி.விஜயகுமார், ஐக்கிய நாட்டு அபிவிருத்தி திட்டத்திற்கான இலங்கை நாட்டிற்கான உதவி பணிப்பாளர் கணேசராஜா உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .