2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தொடர் வீட்டு குடியிருப்பில் தீ: ஒரு வீடு முற்றாக சேதம்

Gavitha   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட கல்மதுரை பிரிவின் குடியிருப்பில், உள்ள தொடர் வீட்டு குடியிறுப்பில் உள்ள ஒரு வீட்டில், இன்று புதன்கிழமை (06) காலை 7.30 மணியளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அவ்வீட்டில் உள்ள உபகரணங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளதுடன் ஏனைய வீட்டுக்கு தீ பரவாமல் அயல் வீடுகளிலுள்ள பொதுமக்களால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்தத் தீ விபத்து காரணமாக 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை தற்காலிகமான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவியமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .