Princiya Dixci / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட பூண்டுலோயா கைப்புகல தோட்டக் குடியிருப்பில் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை 10 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொடர் வீட்டுப் பகுதியில் ஒரு வீட்டில் தீ பரவியுள்ளது.
இதனால் அவ்வீட்டின் உபகரணங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் அயலில் உள்ளவர்களால் ஏனைய வீடுகளுக்குத் தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பூண்டுலோயா பொலிஸ் நிலையத்துக்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களைக் கண்டறியும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago