2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

தீயினால் 25 ஏக்கர் சேதம்

Niroshini   / 2016 ஜூன் 18 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா

பண்டாரவளை பகுதியின் டிக்கராவ வனப்பகுதியின் இன்று அதிகாலை  ஏற்பட்ட பாரிய  தீயினால் சுமார் 25 ஏக்கருக்கு மேற்பட்ட வனப்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.

இதனால், அப்பகுதியில் இருந்த நீர் ஊற்று பிரதேசங்கள்,காட்டுவிலங்குகள் தங்கியிருக்கும் பிரதேசம்,மரங்கள், மூலிகைகள் உள்ள பிரதேசம்  ஆகியன முற்றாக சேதம் அடைந்துள்ளன.

கிராமவாசிகளும் பண்டாரவளை பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ வைத்தவர்கள் தொடர்பாக கண்டறிந்து, அவர்களை கைது செய்வதற்கு பண்டாரவளை பொலிஸார் நடவடிக்கைகளை  எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .