Kogilavani / 2016 ஜூலை 05 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
பிறந்து பதின்மூன்று நாட்களேயான பெண் சிசு, தாய்ப்பால் இறுகியதால் பரிதாபகரமாக உயிரிழந்தச் சம்பவம் பொகவந்தலாவை மோறா தோட்டத்தில் இன்று (5) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அதிகாலை மூன்று மணியளவில், சிசு அழுதுகொண்டிருந்தால் சிசுவின் தாய் அதற்கு பாலூட்டி தூங்க வைத்துள்ளார். காலை ஆறு மணிவரை எவ்வித அசைவுகளும் இல்லாதிருந்ததால் பெற்றோர் உடனடியாக சிசுவை பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் சிசுவை பரிசோதித்த வைத்தியர்கள், தாய்ப்பால் தொண்டையில் இறுகியதால் சிசு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026