Kogilavani / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
தொழிலாளர்களது உரிமைகளைப் பறித்தவர்களுக்கு தொழிலாளர்களது உரிமைப் பற்றிப் பேச எதுவித தகுதியும் கிடையாது. இதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும்' என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும்;; அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான கபீர்; ஹாசீம்; தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற ஐ.தே.க.வின் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
அங்கு மேலும் கூறிய அவர், 'கடந்த பத்தாண்டுகளாக தொழிலாளர்கள் விரட்டிவிரட்டி அடிக்கப்பட்டனர். தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. அவ்வாறான ஓர் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ஒன்றிணைந்த எதிரணியை உருவாக்கிக் கொண்டுள்ளனர். இவர்கள், தங்களால் விரட்டியடிக்கப்பட்ட தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி மே தினத்தை கொண்டாட முயற்சிக்கின்றனர்' என்றார்.
'முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யும்படி வெளிநாடுகள் அழுத்தம் கொடுக்கின்றனவா? என பலர் என்னிடம் கேட்கின்றனர். எமது உள்வீட்டு பிரச்சினைகளை வெளியில் எடுத்துச் சென்று தீர்வு காணும் பண்பு கொண்டவர்கள் நாம் அல்லர். உள்நாட்டு பிரச்சினைகளை உள்நாட்டிலே தீர்த்துக்கொள்வோம். அதற்கு வெளிநாடுகளின் அழுத்தம் தேவைப்படாது. அவ்வாறு அழுத்தங்கள் வந்தாலும் அது
தொடர்பில் கவலைக்கொள்ளமாட்டோம்' என்று அவர் மேலும் கூறினார்.
6 hours ago
6 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
12 Apr 2026