2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைப்பு

Niroshini   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை பெருந்தோட்ட பகுதி தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைவடைந்துள்ளமையை காணமுடிகிறது. குறிப்பாக வாரத்துக்கு ஆறு நாட்கள் வேலை வழங்கப்பட்டு வந்த போதும் தற்போது 3 அல்லது 4 நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

குறிப்பாக பசறை கோணக்கலை, கனவரல்ல, நமுனுகுல, பள்ளகெட்டுவ, எல்ல மற்றும் தெமோதர ஆகிய பெருந்தோட்டப்பகுதிகளில் இந்நிலைமையை காணமுடிகிறது. 

நிலவுகின்ற வரட்சியுடனான காலநிலையால் தேயிலை கொழுந்துகளின் வளர்ச்சி பாதிப்படைந்து வருவதே இதற்கான காரணமென தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .