Niroshini / 2016 மே 12 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிலாளர் தேசிய சங்கத்தினுடைய பேராளர் மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ளது என அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பிலிப் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சங்கத்தின் பேராளர் மாநாடு நவம்பர் 5ஆம் திகதியும் பொது மாநாடு நவம்பர் 6ஆம் திகிதியும் இடம்பெறும் என அவர் அறிவித்துள்ளார்.
எனவே, அதற்கு முன்னோடியாக சகல மாவட்டங்களிலும் மாவட்டக்குழு, இளைஞர்அணி மற்றும் மகளிர் அணி உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான கூட்டம் மாவட்டம் தோறும் நடைபெறும்.
இதில் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் தேசிய சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவர். மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சராக திகாம்பரம்
பதவியேற்றதன் பின் நடைபெறும் முதலாவது மாநாடு இதுவாகும்.
இம்மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் பிலிப் தெரிவித்தார்.
தொடர்ந்து வருகின்ற காலப்பகுதியில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் வளர்ச்சியை விஸ்தரிக்கவும் அதன் அரசியல் அந்தஸ்தை மேலும் பலப்படுத்தவும் இம்மாநாடு முக்கியத்துவம் பெறுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago