Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2022 செப்டெம்பர் 21 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேலைச் செய்த வீட்டில் தங்கைக்கு பல்வேறான அசம்பாவிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வீட்டுக்குச் சென்றால் தனக்கு நேர்ந்த அநீதிகளை சொல்லிவிடுவாள் என்ற அச்சத்தினால், தங்கைக்கு இவ்வாறு செய்திருப்பார்கள் என தான் நம்புவதாக இஷாலினியின் சகோதரன் சாட்சியளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய போது, உடலில் தீக்காயங்களுடன் மரணமடைந்த தலவாக்கலை டயகம மேற்கு பிரிவு 13 யைச் சேர்ந்த ஜூட்குமார் இஷாலினி மரண சாட்சி விசாரணையின் போதே, அவருடைய சகோதரன் விக்னேஸ்வரன் திருபிரசாத் மேற்கண்டவாறு சாட்சியளித்துள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திரா ஜயசூரியவின் முன்னிலையில் நேற்று (20) வழக்கின் மரண சாட்சி அழைக்கப்பட்டது. அதன்போது சாட்சியாளரான விக்னேஸ்வரன் திருபிரசாத் மேற்கண்டவாறு சாட்சியளித்துள்ளார்.
பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள ரிஷாட் பதியுதீனின் வீட்டில்தான் என்னுடைய தங்கை பணியாற்றினார். தனக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளதாக அம்மாவுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து தெரிவித்திருந்தார்.
2021.07.03 அன்றையதினம், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கை அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொரளை பொலிஸ் நிலையத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நான் வந்தேன். எனினும், தங்கையை பார்வையிடுவதற்கு எனக்கு அனுமதி வழங்கவில்லை. அந்த மாதம் 11 ஆம் திகதி தங்கை மரணமடைந்துவிட்டது.
எனது தங்கை எரிந்தே மரணமடைந்தது. தனக்கு பிரச்சினை என்றும் தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறும் அம்மாவிடம் தங்கை கூறியிருந்தார். தனது பிரச்சினைகளை வெளியே கூறிவிடுவாள் என்றுதான், 2021.07.03 அன்றையதினம் தங்கையின் உடலுக்கு தீ வைத்துள்ளனர் என்றார்.
தாய் சாட்சியம்…
ஜூட்குமார் இஷாலினி தாய், ராசமாணிக்கம் ரஞ்சனி சாட்சியமளிக்கையில்,
எனக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த மகள், தனக்கு இங்கு பிரச்சினை என்று கூறியிருந்தாள்.“நீ இரு நான் வந்து உன்னை கூட்டிக்கொண்டு போகிறேன்” எனக் கூறினேன். உனக்காக நான் வந்து வேலைச் செய்கின்றேன் என்றும் கூறியிருந்தேன்.
மகள் அந்த வீட்டுக்கு வேலைக்குச் சென்றதன் பின்னர் விடுமுறையில் ஒருநாள் கூட வீட்டுக்கு வரவில்லை. நாங்களும் அவளை பார்ப்பதற்காக செல்லவில்லை. அதன்பின்னர் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் மகள் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனக் கேள்விப்பட்டோம். அவளை பார்ப்பதற்காக வைத்தியசாலைக்குச் சென்றோம்.
வைத்தியசாலைக்கு நாங்கள் சென்று பார்த்தோம். இயந்திரத்தில் அவள் இருந்தால். 2021.07.15 ஆம் திகதியன்று என்னுடைய மகள் மரணித்துவிட்டாள். மரண விசாரணையில் நான் பங்கேற்கவில்லை.
என்னுடைய மகள் வீட்டிலிருந்து நன்றாகவே சென்றாள். என்னுடைய மகளுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. எனக்குத் தெரியவில்லை. அவருக்கு தீயிட்டுள்ளனர். அது எப்படி நடந்தது என்று சொல்ல எனக்குத் தெரியவில்லை. வீட்டில் இருந்த காலத்தில் எவ்விதமான காதலும் மகளிடத்தில் இருந்ததில்லை என்றும் தனது சாட்சியத்தில் தாய் கூறினார்.
ஜூட்குமார் இஷாலினி சிறிய தந்தையும் வாக்குமூலம் அளித்திருந்தார். வழக்கின் மேலதிக மரண விசாரணை சாட்சிக்கான அழைப்பு ஒக்டோபர் 4 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago