2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

தந்தை செலுத்திய முச்சக்கர வண்டியின் சில்லில் சிக்கி சிறுமி பலி

Kogilavani   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக், பா.திருஞானம்

மலையகத்தின் இருவேறு பகுதிகளில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற இரு விபத்துக்களில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்நேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 2 வருடங்களும் 8 மாதங்களும் நிரம்பிய குழந்தையொன்று புதன்கிழமை (23) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாய், தந்தை மற்றும் சகோதரனுடன்  முச்சக்கர வண்டியில் பயணித்தபோது  கல்நேவ பகுதியில் வைத்து குழந்தை வெளியே தூக்கி வீசப்பட்டு அதே முச்சக்கரவண்டியின் சில்லில் சிக்கியுள்ளது. படுகாயமடைந்த நிலையில் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.   

இதேவேளை, கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற வான் ஒன்று புஸ்ஸலாவையில் வைத்து 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்;ளாகியுள்ளது.

இவ்விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  8 பேர் காயமடைந்த நிலையில்  புஸ்ஸல்லாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த வானில் 3 சிறுவர்களும் 3 பெண்களும் 2 ஆண்களும் பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .