Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 31 , பி.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
தென்னை மரமொன்றில் ஏறி தந்தையொருவர் பறித்த தேங்காய், அவரது மகனது தலையில் விழுந்தமையால் மகன் உயிரிழந்த சம்பவம் நமுனுகுல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் நமுனுகல- மியனகந்துர பிரதேசத்தைச் சேர்ந்த 10ஆம் தரத்தில் கல்வி கற்பவர் என்றும் தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் (29) மாலை 6.30 மணியளவில் 50 அடி உயரமான தென்னை மரத்தில் ஏறி தந்தை தேங்காய்களைப் பறித்துக்கொண்டிருந்த போது, வீட்டிலிருந்து வெளியே வந்த மகனின் தலை மீது தேங்காய் விழுந்துள்ளது.
இதனையடுத்து பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மகன் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை இந்த மரணத்துக்கு காரணமான 55 வயது தந்தைக்கு எதிராக, கவனயீனமாக தேங்காய் பறித்த குற்றச்சாட்டின் கீழ் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025