Sudharshini / 2016 ஜனவரி 26 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திரவிராஜ்
மாத்தளை - தம்புள்ளை வீதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்கள், கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அதன் காரணமாக, குறித்த வீதியூடான போக்குவரத்து நேற்றைய தினம் பாதிக்கப்பட்டிருந்தது.
புதிய வழித்தட அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுத்தல், தூர சேவையில் ஈடுபடும் பஸ்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மேலதிகமாக அனைத்து இடங்களிலும் தரித்து செல்லல் என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
குறித்த வீதியில் சேவையில் ஈடுபடும் சுமார் 30 பஸ் உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துநர்கள் ஆகியோர், மாத்தளை -அம்பகஹமுவ பஸ் நிறுத்துமிடத்துக்கு முன்னால் ஒன்றுகூடி தமது எதிர்ப்பை தெரிவித்ததுடன், தமது பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகள் விரைவாக தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில், மத்திய மாகாண பயணிகள் அதிகார சபையின் தலைவர் சரிக் வீரவர்தனவிடம் கேட்டபோது, இது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை(22) கலந்துரையாடிய நிலையில் 4 நாட்களுக்குள் இவ்வாறு ஆர்;பாட்டத்தில் ஈடுபடுவது தொடர்பில் தாம் வருத்தமடைவதாகவும் இவ்வாறான பணிப்புறக்கணிப்புகள் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago