Niroshini / 2016 ஜூன் 18 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்
மலையகத்தில் நிர்மாணிக்கப்படும் தனி வீட்டுத்திட்டம் தொடர்பில் தாம் மகிழ்சியை வெளிகாட்டியதுடன் பாரட்டுகளையும் நாட்டின் நிறுவனம் ஒன்றின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தில் நிர்மாணிக்கப்படும் தனி விட்டுத்திட்டத்தை பார்வையிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மலையக தோட்ட பகுதிகளில் அமைச்சர் திகாம்பரம் முன்னெடுத்துவரும் தனிவீட்டுதிட்டம் குறித்து மக்கள் மத்தியில் நல்லதெரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நிலவுரிமை, வீட்டுரிமை அற்றவர்களாக இருந்த எமது மக்களுக்கு நிலவுரிமை, வீட்டுரிமை பெற்றுகொடுக்கவேண்டும் என அரசாங்க மட்டத்தில் எண்ணம் ஏற்பட்டுள்ளது.அந்தவகையில், மலையகத்தில் தனிவீட்டுத்திட்டம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வீடமைப்பு திட்டம் தொடர்பில் அறிந்துகொள்ள பெல்ஜியம் நாட்டின் நிறுவனம் ஒன்றின் அதிகாரி ஒருவர் மலையகத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
அமைச்சர் பி.திகாம்பரத்தின் அனுமதியுடன் நேற்று தலவாகலை ஹொலிரூட் தோட்டத்தில் ஆரம்பிக்கப்ட்டுள்ள தனி வீட்டு திட்டத்தை பார்வையிட்டதுடன் பாராட்டுக்களையும் மகிழ்சியையும் தெரிவித்தார்.
மேற்படி விஜயத்தின் போது மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
4 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago