2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

‘தபால் மூல இலவசக் கல்வியை முன்னெடுக்கவும்’

மொஹொமட் ஆஸிக்   / 2020 மே 31 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்- 19 நெருக்கடி, இன்னும் 100 சதவீதம் சாதாரண நிலைக்கு வராத காரணத்தால், பாடசாலைகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் இன்னும் பிற்போடப்பட்டுள்ள நிலையில், பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு, தபால் மூலம் இலவசக் கல்வியை கற்றுக்கொடுக்குமாறு, கல்வித்துறை கல்விசாரா ஊழியர் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கல்வித்துறை கல்விசாரா ஊழியர் சங்கத்தினரால், நேற்று (30), கண்டி, அலவத்துகொடையில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அதில் உரையாற்றிய சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே. திலகரத்ன, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக, இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிப்பதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது என்றும் இருந்த போதிலும், தற்போதைய நிலையில், பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை இல்லை என்று தெரியவருகின்றது என்றும் அவர் கூறினார்.

வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள அநேகமானோர் கொவிட் – 19 பாதிப்புக்கு உள்ளான நிலையிலேயே உள்ளனர் என்றும் எனவே, வைரஸ் தொற்று முற்றாக நீங்கும் வரை, பாடசாலைகளை ஆரமபிப்பதை பின்  போட்டு மாணவர்களுக்கு தபால் மூலம் கல்வியை கற்றுக் கொடுக்குமாறு தாங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .