மொஹொமட் ஆஸிக் / 2020 செப்டெம்பர் 23 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மடவளையைச் சேர்ந்த முன்னாள் வங்கியியலாளர் ஜே.எம்.சித்தீக் எழுதிய, “தப்புக்கணக்கு” எனும் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா, சனிக்கிழமை (26) நடைபெறவுள்ளது.
இந்த விழா, மடவளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில், காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
மாத்தளை தமிழ் இஸ்லாமிய இலக்கியப் பேரவையின் செயலாளர் எம்.எம்.பீர்முஹம்மது தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார் என்றும் றமீஸ் அப்துல்லா, விமர்சன உரையாற்றுவார் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பாத்ததும்பறை பிரதேச சபை அங்கத்தவர் எம்.எம்.றியாஐ் வரவேற்புரையையும் என்றும் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஸ்மி பதிப்புரையையும் மத்திய மாகாண தொழிற்றுறை வாரியத்தின் பணிப்பாளர் பவுஸ் ஏ.காதர் ஆசியுரையையும், வத்தேகம கல்விப் பணிமணையைச் சேர்ந்த ஜே.பவுசுர் றஹ்மான் வாழ்துரையையும், சமூக சமய பேச்சாளரும் நாவலப்பிட்டிய ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமிகள் கோவில் அறங்காவலருமான முத்தையாபிள்ளை ஸ்ரீகாந்தன் மகிழுரையையும் வழங்கவுள்ளனர்.
இந்நிகழ்வில், லேக்கவுஸ் நிறுவனத்தில் கடமை புரிந்து ஓய்வுபெற்ற எஸ்.எம். நிலாம் பிரதம அதிதியாகக் கௌரவிக்கப்படவுள்ளார் என்றும் இந்நிகழ்வுக்கான அனுசரணையை, மடவளை பஸார் வை.எம்.எம்.ஏ கிளை, கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் என்பன இணைந்து வழங்கவுள்ளன என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
27 minute ago
30 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
30 minute ago
1 hours ago
1 hours ago