Niroshini / 2016 மே 31 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்
இலங்கை மின்சார சபையின் கினிகத்தேனை பிரதேச மின் பொறியியலாளர் காரியாலயத்திலிருந்து பொது மக்களுக்கு அனுப்பிவைக்கப்படும் கடிதங்கள் அனைத்தும் சிங்கள மொழியில் காணப்படுவதால் தமிழ் மொழி பேசுகின்ற மின்பாவனையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவருவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமக்கு வருகின்ற கடிதங்களில் என்ன அடங்கியிருக்கிருக்கின்றது என்பது தொடர்பில் விளக்கமற்ற நிலையில் தமிழ் பேசுகின்ற மின்பாவனையாளர்கள் தடுமாற்றம் அடைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு விளக்கமற்ற நிலையில் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் தண்டப்பணங்கள் செலுத்தவேண்டிய சந்தர்ப்பங்களில் பாரிய இன்னல்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரனிடம் பொது மக்கள் முறையிட்டிருந்தனர். இப் பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்தறிந்த மாகாண சபை உறுப்பினர் நேரடியாக பிரதேச மின் பொறியியலாளரை தொடர்பு கொண்டு, தமது அதிருப்தியை வெளியிட்டபோது, இது தொடர்பில் தான் ஆராய்ந்து இனி வரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் இழைக்கப்படமாட்டாது என மாகாண சபை உறுப்பினருக்கு அவர் உறுதியளித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு அரச நிறுவனங்களில் இவ்வாறாக தமிழ் பேசும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றமை தொடர்பில் தேசிய மொழிகள், சகவாழ்வு மற்றும் தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோகணேசனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago