Kogilavani / 2017 மே 17 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
“மலையகப் பகுதிகளில், தமிழ்மொழி அமுலாக்கலில் உள்ள குறைபாடுகளை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினால், அதற்கு உடனடியாகத் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும்” என்று, மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இவ்வாறான பிரச்சினைகளை, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் அமைச்சர் மனோ கணேசனின் கவனத்துக்கு கொண்டுசெல்வதனூடாக, தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் அவர் கூறினார். இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறியுள்ள அவர்,
“மலையகப் பகுதிகளில் பொது விளம்பரங்கள், அறிவித்தல்கள் என்பனவற்றில் தமிழ் மொழிக்கு உரியஇடம் கொடுக்கப்படாமை, அரச நிறுவனங்களில் தமிழ்மொழிக்கு உரிய அந்தஸ்த்து வழங்கப்படாமை போன்றவை தொடர்பில் ஆதாரங்களுடன் அறியத்தருமாறு, அமைச்சர் மனோ கணேசன் என்னிடம் கூறியுள்ளார்.
இவ்வாறு அறியத்தரும்பட்சத்தில், இவ்விடயங்கள் தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் கூறினார். அத்துடன், தமிழ்மொழி அமுலாக்கலுக்குரிய நிதியையும் பெற்றுக்கொள்ள முடியுமென அமைச்சர் மனோ கணேசன், என்னிடம் அறிவித்தார்” என்று, மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மேலும் கூறினார்.
5 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
11 Apr 2026
11 Apr 2026